முல்லைத்தீவு – கள்ளப்பாடு, வடக்கு றோயல் பாலர் பாடசாலையில் இன்று கண்காட்சி நிகழ்வு இடம்பெற்றது. 


இந் நிகழ்வின் முதன்மை விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன் கலந்துகொண்டார்.பாலர் பாடசாலையின் தலைமை ஆசிரியர் திருமதி நடேசினி - இரவிக்குமார் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், முன்பள்ளிகளின் இணைப்பாளர் செல்வி.சோ.கலாமலர் அவர்கள் கலந்துகொண்டார்.

 

மேலும் பாலர் பாடசாலை ஆசிரியர் திருமதி.யனார்த்தன் - கம்சத்தனி, பாலர் பாடசாலை மாணவர்கள் பெற்றோர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.

 

அத்தோடு அங்கு சிறார்களால் அழகிய கண்காட்சிப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.