மன்னார் கடற்பரப்பில் அத்துமீறிய தமிழக மீனவர்கள் 23 பேர் கைது

Published By: Raam

13 Mar, 2016 | 06:03 PM
image

(எஸ்.ரவிசான்)
எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டமை தொடர்பில் 23 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று கைது செய்து மன்னர் பொலிஸ் நிலையத்தில் அஜர்ப்படுத்தியதாக பொலிஸ் ஊடக பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது. 

நேற்றைய தினம் மன்னார்-வெளிபாரை கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு கொண்டிருந்த தமிழ மீனவர்களை இணங்கன்டு அத்தருணத்திலேயே படகுகள் இரண்டு உடப்பட மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்களை கைது செய்துள்ளனர். 

இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்கள்உட்பட படகுகள்வலைகளை மன்னார் பொலிஸ் நிலையத்தில் அஜர்படுத்தினர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் 15 வயதிற்கும் 56 வயதிற்கும் இடைப்பட்டவர்கள். 

இதனிடையே கைது செய்யப்பட்ட மீனவர்கள்23 பேரரையும் நாளைய தினம் பொலிஸார் மன்னார் நீதிமன்றில் அஜர்ப்படுத்தவுள்ளனர். 

இவ்வாறான நிலையில் கடந்த மூன்று மாதங்களில் இலங்கையின் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டமை தொடர்பல் தமிழகத்தின் பல்வேறு பிரதேசங்களை சேர்ந்த 91 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களிடமிருந்து 20 இற்கும் மேற்ப்பட்ட படகுகள் உட்பட சட்டவிரோத வலைகளை கடற்படையினர் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆலயங்களை விடுவிப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுப்பேன்...

2025-01-18 21:40:27
news-image

மருந்து உற்பத்தி திறனை துரிதமாக அதிகரிக்க...

2025-01-18 15:55:31
news-image

உள்ளூராட்சி தேர்தலை காலம் தாழ்த்த முயன்றால்...

2025-01-18 15:56:17
news-image

புங்குடுதீவில் குளத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு

2025-01-18 18:22:23
news-image

சம்மாந்துறையில் மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திய...

2025-01-18 18:15:19
news-image

2026இல் மறுமலர்ச்சியின் தைப்பொங்கலாக கொண்டாடுவோம் -...

2025-01-18 22:11:38
news-image

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை துர்க்கையம்மன் கோவிலில் தேசிய...

2025-01-18 17:13:58
news-image

வருமான வரி பரிசோதகர்கள் என கூறி...

2025-01-18 16:41:05
news-image

களுத்துறையில் பாலமொன்றுக்கு அருகில் குப்பை கூளங்களில்...

2025-01-18 16:55:31
news-image

கம்பஹா ரயில் நிலையத்திற்கு அருகில் போதைப்பொருளுடன்...

2025-01-18 16:02:19
news-image

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வெள்ள அனர்த்தத்தால் விவசாயிகள்...

2025-01-18 16:09:52
news-image

இ. போ. சபையின் பஸ் சாரதி,...

2025-01-18 15:59:24