கைத்தொழில்  மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன்  நிதி ஒதுக்கீட்டில்  மன்/பி.பி.பொற்கேணி அ.மு.க பாடசாலையில் 2மாடி கட்டடம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு அதிபர் எம்.எச்.ஹஸ்பி தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம் பெற்றது.

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பிரத்தியோக செயலாளரும் முன்னால் மாகாண சபை உறுப்பினருமான ரிப்கான் பதியுதீன் , மாகாண சபை உறுப்பினர் அலிக்கான் ஷரீப், வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி சுகந்தி செபஸ்தியன்,முசலி பிரதேச சபை உறுப்பினர் மற்றும் பாடசாலை சமூகம் கிராம முக்கியஸ்தர்கள் கலந்து சிறப்பித்ததோடு  வைபவ ரீதியாக அடிக் கல்லினை நாட்டி வைத்தமை குறிப்பிடத்தக்கது.