பயம் இன்றி பயிர் செய்வோம் என்னும் தொனிப்பொருளில் 2018/2019 ஆண்டுக்கான காலபோக உரமானிய  சுற்றறிக்கை வழங்கும் செயல்திட்டம் நேறறு விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் இடம்பெற்றிருந்தது.

வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று காலை இடம்பெற்றிருந்த நிகழ்வு 9.30 மணியளவில் ஆரம்பமாகியிருந்தது. இதன் போது கருத்து வெளியிட்டிருந்த விவசாய பிரதி அமைச்சர் சிறந்த விவசாய துறை சார் வல்லுனர்களின் கடின உழைப்போடு குறுகிய கால பரப்பினுள் பரந்தளவிலான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அதன் பிரதிபலனாகவே காலபோக செய்கையை கருத்தில் கொண்டு இம்முறை விவசாய செய்கையாளர்களுக்கு உரிய தருணத்தில் உரமானியங்கள் வழங்குவதற்கு சிறந்த சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டிருப்பதாகவும்,பயமின்றிய விவசாய செய்கைக்கு காப்புறுதிகள் வழங்கப்பட்டு,கொள்வனவுகள் அதிகரிக்கப்பட்டு உற்பத்திகளும் அதிகரிக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவித்தார்.

சுற்றறிக்கையில் உர வகைகளை அளவுடன் உபயோகப்படுத்த குறிப்பிடப்பட்டுள்ளது. விவசாய அடையாள அட்டைகள் வழங்க நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதுடன்.பதிவு செய்யப்பட விவசாயிகள் பதிவு செய்யப்பட வேண்டும் எனவும் எதிர்கால விவசாயம் சிறப்பான வளங்களை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவணங்கள் இல்லாது பயிர் செய்கைகள் மேற்கொள்ளும் பிரதேச பகுதிகளை கமநல சேவைநிலையங்கள் உறுதிப்படுத்துவதன் ஊடாக உரமானியங்களை பெற்றுகொள்ளவும்சுற்றறிக்கையில் உள்வாங்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் தமது பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியினையும் இந்த நாட்டிற்கு சிறந்த உற்பத்திகளை வழங்குவதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டிருந்ததோடு பரில்சில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தனர்.

கமநல சேவை நிலையங்கள் ஊடாக விஜயம் செய்து பல விடையங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு இருந்தவேளையும்,இன்று இடம்பெற்ற மானிய சுற்றறிக்கை நிகழ்விலும் பல்வேறு திணைக்களத்தின் உயர் அதிகாரிகளும் இணைந்திருந்தமையினால் முக்கியமான விடையங்களை அதிகாரிகளுக்கு நேரடியாக தெரிவிக்கும் முகமாக பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் சிறிய கலந்துரையாடலுக்கான சந்தர்ப்பத்தினையும் வழங்கியிருந்தார்.