கொழும்பு கோட்டையிலிருந்து இன்று அதிகாலை 4.30 மணியளவில் பொல்காவெல நோக்கி பயணித்த கடுகதி புகையிரதம் ஒன்று கம்பஹா - பெம்முல்ல பகுதியில் வைத்து தொழில்நுட்ப கோளாறுக்குள்ளாகி பழுதடைந்துள்ளது.

இதேவேளை தொழிநுட்ப கோளாறினால் பழுதடைந்துள்ள புகையிரதத்தை தண்டவாளத்திலிருந்து அகற்றும் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாக புகையிரத கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக இப் புகையிரத பாதையினூடாக பயணிக்கவிருந்த மேலும் ஒரு புகையிரத போக்குவரத்தில் அரை மணித்தியாலயம் காலதாமதமாகியதாகவும், ஏனைய புகையிரதங்கள் வழமை போன்று பயணிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.