அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை பிரஜையான 25 வயதுடைய மொஹமட் நிசாம்தீன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சிட்னி பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் இவர், ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் சார்பாக சிட்னி நகரை குண்டு வைத்துத் தகர்த்தல் மற்றும் அவுஸ்திரேலியாவின் முன்னணி ஆளுமைகளைப் படுகொலை செய்தல் ஆகிய குற்றச்செயல்களுக்கான திட்டங்களை தீட்டிய குற்றச்சாட்டின் கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.