எம்மில் பலரும் தங்களின் இரத்தத்தில் உள்ள சீனியின் அளவு குறித்து கவலைப்படும் அளவிற்கு, இரத்த அழுத்த அளவைப் பற்றிக் கவலைக்கொள்வதில்லை. ஆனால் இது தவறு என்கிறார் வைத்தியர் ஸ்ரீதேவி.

இது குறித்து மேலும் தெரிவித்ததாவது,

இரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்கவில்லை என்றால் இதய பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு, பக்கவாதம் போன்ற பல பாதிப்புகள் ஏற்படக்கூடும். அத்துடன் இரத்த அழுத்தத்தின் அளவு அதிகரித்து அது ஒரு நோயாக மாறும் வரை எந்த அறிகுறியையும் காட்டாது. அதனால் இரத்த அழுத்தம் குறித்து நாம் கவனமாக இருக்கவேண்டும்.

தற்போது பலரும் வைத்தியசாலைக்கு  சென்று இரத்த அழுத்தத்தைப் பரிசோதித்து தங்களின் இரத்த அழுத்த இயல்பாக இருப்பதாக கருதுகிறார்கள்.

ஆனால் இரத்த அழுத்தப் பரிசோதனையை Ambulatory Blood Pressure Monitoring  என்ற கருவியின் மூலம் தொடர்ந்து கவனிக்கவேண்டும். அப்போது தான் எமக்கு எப்போது இரத்த அழுத்தம் உயர்கிறது? எப்போது குறைகிறது? இருபத்திநான்கு மணி நேரமும் சீராகவே இருக்கிறதா? இல்லையா? என்பது குறித்து இத்தகைய பரிசோதனை மூலம் துல்லியமாக அறியலாம்.

இதனை அறிந்த பிறகு உரிய சிகிச்சையை எடுத்துக் கொண்டால் உயர் குருதி அழுத்தத்தை குறைக்கலாம். அதனை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக கொண்டு ஆயுள் முழுவதும் ஆரோக்கியம் கெடாமல் வாழலாம்.