நாடளாவிய ரீதியில் இன்று பிற்பகல் 02.30 அளவில்  திடீர் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார். 

இதற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், இது குறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

முன்னதாக இரு முறை இவ்வாறு நாடளாவிய ரீதியில் திடீர் மின் தடை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.