கொத்மலை, இறம்பொடை இந்து தேசிய கல்லூரியில் கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் தொழில்நுட்ப ஆய்வுகூடம் நிர்மாணிக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டது.

1000 பாடசாலைகள் அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் தொழில்நுட்ப ஆய்வுகூடம் நிர்மாணிக்கப்பட்டு இன்று வைபவ ரீதியாக மாணவர்களுக்கு கையளிக்கப்பட்டது.

கல்லூரியின் அதிபர் ரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இ.தொ.காவின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், 

மத்திய மாகாண பதில் முதலமைச்சரும், தமிழ் கல்வி அமைச்சருமான எம்.ரமேஷ்வரன், இ.தொ.காவின் பிரதி பொது செயலாளர் ஜீவன் தொண்டமான், கொத்மலை பிரதேச சபை உறுப்பினர்கள், கொத்மலை கல்வி பணிமனையின் அதிகாரிகள் உட்பட பல பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.