வடக்கு மாகாண சபையில் அமைச்சர்கள் தொடர்பில் சர்சை:சி.வி.கே சிவஞானம் தலைமையில் கலந்துரையாடல்

Published By: R. Kalaichelvan

27 Sep, 2018 | 05:33 PM
image

(எம்.நியூட்டன்)

வடக்கு மாகாண சபையில் தொடர்ந்தும் சர்ச்சைகள் அமைச்சரவை விவகாரம் அதனைத் தீர்ப்பதற்காக எடுத்துக்கொள்ளப்பட்ட முயற்சிகள் மற்றும் பளையில் காற்றாலை அமைக்கப்பட்டதற்கான ஒப்பந்தங்கள் மற்றும் பலநோக்குகூட்டுறவுச்சங்கம் ஒன்றில் இடம்பெற்ற சீமெந்து விநியோகத்தில் எற்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் மாகாண சபை அமர்வில் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தது. 

இத்தகைய சூழ்நிலையில் சபை அமர்வு சர்ச்சைகள் நிறைந்ததாகவும் வாதப் பிரதிவாதங்களுடனே இடம் பெற்றது.

வடக்கு மாகாண சபையின் 132 ஆவது அமர்வு கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் தலைமையில் இடம் பெற்றது.

இதன்போதே பல சர்ச்சைகள் இடம்பெற்றன.

குறிப்பாக வடக்கு மாகாண சபையின் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்காக அவைத்தலைவர் தான் எடுத்து முயற்சிகள் தொடர்பில் தெரிவித்தார்.

குறிப்பாக அரசியல் அமைப்பு உறுப்புரையின் படி முதலமைச்சரின் ஆலோசனையின் பெயரில் ஆளுநர் அமைச்சர்களினால் நியமிக்கலாம். தற்போதைய சூழலில் நீதிமன்றக் கட்டளையின் பிரகாரம் டெனீஸ்வரன் தொடர்ந்தும் அமைச்சரவையில் இருக்கலாம் என்ற அதனால் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை சீர் செய்யப்படவேண்டும் என்ற நீதிமன்றக் கட்டளை இன்னும் அமுல்படுத்தப்படவில்லை. 

இது தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ள நிலையில் 29.06.2018 க்குப் பின்னரான சூழலில் வடக்கு மாகாண சபையில் சட்டவலுவான அமைச்சர் சபை இல்லை என்பதை இங்கு வலியுறுத்துகின்றேன். 

இப்போதுள்ள அமைச்சரவையை ஏற்றுக்கொள்வதாயின் நீதிமன்றத்தின் உத்தரவை மீறுவதாக அமையலாம்.இந்த சபையோ அதிகாரிகளே அமைச்சின் செயலாளர்களே எவராவது இந்த உத்தரவு எமக்குவழங்கப்படவில்லை என்று கூறிக்கொண்டிருப்பது பின்னாளில் அது பிரச்சினை உருவாக்கும் என்பதை தெளிவுபடுத்திக் கூறுகின்றேன். 

நீதிமன்ற உத்தரவு என்பது வீடுவீடாகவோ கந்தோர் கந்தோராகவோ கதவு தட்டிச் சொல்லும் விடையம் அல்ல.

நீதிமன்ற உத்தரவு சட்டப்படியானது இது எல்லோரும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும். சரியான முறையான வழிநடத்தலை இந்தச் சபை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை உருவாக்க விரும்பவில்லை. இதனை அனைவரும் கவனத்திற் கொள்ளவேண்டியது அனைவரின் கடப்பாடாகும்.

எதிர்க்கட்சித்தலைவர் தவராசா தெரிவிக்கையில்,

குறித்த விடையத்தை ஏற்கனவே நீங்கள் கூறியுள்ளீர்கள் ஆனால் இங்கு நடப்பது ஏதோவெல்லாம் நடக்கின்றது. இந்தக் குழப்பமான சூழலின் பின்னர் அமைச்சர்கள் என்று இருக்கிறவர்கள் யாராவது பிரேரணைகள் கொண்டு வந்தாலும் கூட நான் அதனை எதிர்த்திரக்கிறேன் யார் அமைச்சர்கள் எத்தனை அமைச்சர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு பதில் இல்லை. முதலமைச்சர் மற்றும் டெனீஸ்வரே அமை்சசர்களாக உள்ளனர். 

மற்றவர்கள் அமைச்சர்கள் என்று கூறி சம்பளம் நிகழ்வுகள் அறிக்கைகள் போன்வற்றை செய்து வருகின்றார்கள். மூன்று மாதமாக இவைதான் நடக்கின்றது.

இதற்கு ஒரு சரியான தீர்வு கிடைக்காமல் தொடர்ந்தும் கதைத்துக் கொண்டிருப்பது சரியானதா என கேள்வி எழுப்பியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31