ஆறாவது இருபதுக்கு 20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டி கடந்த 8 ஆம் திகதி ஆரம்பமாகியது. இதன் தகுதிகான் சுற்று ஆட்டங்கள் இன்றுடன் நிறைவடைகின்றது.

தகுதிக்கான் போட்டியில் 11 ஆவது போட்டியில் இன்று அயர்லாந்து, நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.

நாணயச்சுழற்சியில் வென்ற அயர்லாந்து அணி முதலில் களத்தடுப்பை தீர்மாணித்தது.

மழைக்காரணமாக போட்டி ஆரம்பமாகுவது தாமதமாகியுள்ளது.

அயர்லாந்து, நெதர்லாந்து அணிகள் ஏற்கனவே  'சுப்பர் 10 " வாய்ப்பை இழந்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.