முல்லைத்தீவு குமுழமுனை குருந்தூர் மலை தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலிஸார் முன்வைத்த வழக்கு தொடர்பில் விடயம் இன்று  தொல்பொருள் திணைக்களத்தின் சட்டவாளர்கள் ஊடாக முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் பாதிக்கப்பட்ட தரப்பாக தெரிவித்து பௌத்த பிக்குகள் இருவரும், சட்டத்தரணி மூவரும் மன்றில் முன்னிலையாகியுள்ளார்கள். 

தங்கள் வாதத்தின் அடிப்படையில் குருந்தூர் மலை வர்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட இடம் என்றும் பௌத்த ஆலயம் ஒன்று இருந்தது தொடர்பாகவும் எடுத்துரைத்துள்ளார்கள்.

தற்போது பௌத்த ஆலயம் அமைப்பதற்கு வரவில்லை என்றும் இடத்தினை ஆராச்சி செய்வதற்காக வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

இது விடயம் குறித்து மூத்த சட்டத்தரணி ரி.பரஞ்சோதி மன்றில் குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் பொலிஸாரால் தொடரப்பட்ட வழக்கு தொடர்பிலும் எடுத்துரைத்துள்ளார்கள் .அதன் பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது,

கடந்த 13.09.18 அன்று நீதிமன்றத்தினால் குருந்தூர் மலைக்கு மக்கள் சென்று வரலாம் என்றும் அங்கு எந்த வித மாற்றங்களும் செய்யமுடியாது என இடைக்கால உத்தரவினை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவானது மறு தவணைவரை 01.10.18 வரை நீடிக்கப்பட்டுள்ளது. அன்றைய தவணையில் வழக்கு தாக்கல் செய்து அறிக்கை ஒன்றினை சமர்ப்பித்த பொலிஸார் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்தும் சம்மந்தப்பட்டவர்களிடம் இருந்தும் ஒரு முழுமையான அறிக்கை தயாரிக்கப்பட்டு மன்றில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன் பின்னர் தற்காலிக உத்தரவினை தளர்த்துவதா அல்லது நீடிப்பதா என நீதிமன்றம் முடிவெடுக்கும் என்று நீதிபதியால் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து மேலும்  தெரிவித்ததாவது,

குறித்த வழக்கு 01.10.18 ஆம் திகதி குறுகிய தவணை இடப்பட்டு திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பாதிக்கப்பட்ட தரப்பினர் இரண்டு பௌத்த குருமார்கள் மற்றும் மூன்று சட்டத்தரணிகளும் குருந்தூர் மலைப்பகுதியில் குருந்த அசோகாராம பௌத்த வழிபாட்டு தலம் இருந்துள்ளது.

 என்றும் இதனை இங்குள்ள அரசியல் வாதிகளான  குறிப்பாக வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் மற்றும் வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவனேசன் ஆகியோர் மக்களை திரட்டி குழப்பத்தை விளைவித்துள்ளனர் என்றும் குருந்தூர்  மலைப்பகுதியில் தொல்பொருள் ஆய்வினை மேற்கொள்ளவே தாங்கள் ஏற்கெனவே வருகைதந்ததாகவும் மன்றில் தெரிவித்துள்ளார்கள்.