இந்தியா கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை அருகேயுள்ள மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் கோகிலாவிற்கும் (45) திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த நடராஜனுக்கும் 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தும் இதுவரையில் குழந்தை இல்லை.
குழந்தை வேண்டி கோகிலா ஏராளமான கோவில்களுக்கு சென்று வேண்டி வழிபட்டு வந்தார். மேலும் கணவர் ஊரான வேடசந்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற புற்று கோவிலுக்கு கோகிலா வாரந் தோறும் சென்று பிரார்த்தனை செய்து வந்தார்.
இந்நிலையில் கோகிலா கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பம் அடைந்ததாக உணர்ந்தார். ஒரு சில வாரங்களுக்கு பின்னர் வைத்தியசலைக்கு சென்று ஸ்கேன் செய்து பார்த்த போது கோகிலா கர்ப்பம் அடைய வில்லை என வைத்தியர்கள் கூறியுள்ளனர். ஆனால் கோகிலாவோ அதனை ஏற்கவில்லை.
தொடர்ந்து தான் கர்ப்பம் அடைந்திருப்பதாக கூறி வந்த கோகிலா முழு நம்பிக்கையுடன் இருந்தார். தான் வாரந்தோறும் செல்லும் புற்றுக்கோவில் பூசாரியிடம் ஸ்கேனிங் ரிப்போட்டை காண்பித்துள்ளார்.
அதனை பார்த்த பூசாரியும் கர்ப்பத்தை உறுதி செய்ததோடு, கோகிலாவின் வயிற்றில் நாகப்பாம்பு வளருவதாகவும், நிறைந்த பவுர்ணமி நாளில் நள்ளிரவில் 12.20 மணியளவில் நாகப்பாம்பு பிறக்க உள்ளதாகவும் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.
இந்த சம்பவம் லாலாப்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM