ஓரினச்சேர்க்கை சட்டத்தை எதிர்த்தமையே அமைச்சர் மங்களவின் சினத்திற்கு காரணம்  -சிங்கள ராவய 

By T Yuwaraj

27 Sep, 2018 | 03:16 PM
image

ஓரினச்சேர்க்கையை குற்றமாக கருதும் சட்டப் பிரிவை இரத்துச் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகையில் அதற்கு முற்று முழுதான எதிர்ப்பை காட்டியமையினாலேயே அண்மையில் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையை, அமைச்சர் மங்கள சமரவீர கடுமையாக சாடியிருந்தார்

 என சிங்கள ராவய பொதுச் செயலாளர் மகல்கந்தே சுகத்த தேரர் தெரிவித்தார். 

மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தொடர்பாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்திருந்த கூற்று தொடர்பில் பொதுபல சேனாவின் நிலைப்பாட்டை தெரிவிக்கும் வகையில் இன்று பொதுபலசேனாவின் தலைமைக்காரியாலயத்தில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே  மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இங்கு மேலும் உரையாற்றிய தேரர் கருத்து தெரிவிக்கையில், 

ஓரினச் சேர்க்கையை அனுமதித்து ஏற்றுக்கொள்வதாக சட்டப் பிரிவை மாற்ற முயற்சிக்கையில் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையை கடுமையாக எதிர்த்தார். இந்த சம்பவத்தை மனதில் வைத்து பலி தீர்க்கும் நோக்குடனேயே அமைச்சர் மங்கள சமரவீர இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். 

இதனை நாம் மதத்தலைவர்கள் என்ற ரீதியில் கடுமையாக எதிர்க்கின்றோம். இவ்விடயம் குறித்து கத்தோலிக்க மதத்தினரும் கத்தோலிக்க சபையும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்திருக்கும் அனைத்து எதிர்ப்பு போராட்டங்களுக்கும் எமது முழுமையான ஆதரவினைத் தருவோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்ளூராட்சிமன்ற சபைகளை கலைக்கும் அதிகாரம் எமக்கு...

2023-02-01 18:47:56
news-image

13 ஐ அமுல்படுத்தினால் தமிழ் -...

2023-02-01 18:44:58
news-image

சிங்கள- தமிழ் இனக்கலவரம் மீண்டும் தோற்றம்...

2023-02-01 18:45:41
news-image

இலங்கை வழமைக்கு திரும்ப அமெரிக்கா தொடர்ந்தும்...

2023-02-01 18:43:08
news-image

மக்களை வஞ்சிக்காத சபையை நாம் அமைப்போம்...

2023-02-01 18:42:09
news-image

யானையின் வாலைப் பிடித்து சொர்க்கம் செல்ல...

2023-02-01 18:41:11
news-image

பயங்கரவாத தடைச்சட்டத்தை சீர்திருத்தும் நடவடிக்கைகளை தொடர்ந்து...

2023-02-01 17:33:03
news-image

இலங்கை ஜனநாயகம் நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதற்கான தருணம்...

2023-02-01 17:03:46
news-image

ஊடகவியலாளர் நிபோஜனின் உடலம் இறுதி அஞ்சலியுடன்...

2023-02-01 18:38:05
news-image

சமூக அமைதியின்மை நிலவிய காலங்களில் அரசாங்கம்...

2023-02-01 16:44:53
news-image

எல்பிட்டிய பிரதேச வீடு ஒன்றிலிருந்து இரு...

2023-02-01 16:39:04
news-image

வைத்தியசாலையில் சிகிச்சைபெறும் மனைவியை பார்க்க  தாயுடன்...

2023-02-01 16:14:37