(இரோஷா வேலு) 

தேர்தலில் தோல்வியுற்றவர்களுக்கு அல்லது அதிருப்தி தெரிவிப்பதற்கு துப்பாக்கி பிரயோக மேற்கொள்ளவில்லை. மாறாக எமது வீடுகளுக்கு முன்பாக வெறும் யானை மலமும் அல்லது காய்ந்த சறுகுகளே வீசப்படும். இது அன்றைய காலகட்டத்தில் ஆட்சி புரிந்த பண்டாரநாயக்க போன்ற தலைவர்களின் ஆட்சி திறமையை காட்டுகிறது என தெரிவித்த சபாநாயகர் கருஜெயசூரிய இக்காலத்தை போன்றல்லாது அந்த காலத்தில் ஆயுதக் கலாசாரமற்ற ஓர் இளைஞர் சமூதாயம் நாட்டுக்காக உழைத்தது எனவும் தெரிவித்தார். 

எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் 59 ஆவது ஞாபகார்த்த நினைவுதினத்தை முன்னிட்டு அரசியல் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பண்டாரநாயக்க குடும்பத்தை சேர்ந்த எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க, சிறிமாவோ பண்டாநாயக்க மற்றும் அனுர பண்டாரநாயக்கவை நினைவுகூறும் நிகழ்வு இன்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றிருந்ததது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது சபாநாயகர் கருஜெயசூரிய, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன, ரோகன லக்ஸ்மன் பிரியதர்ச, பௌசி, டக்ளஸ் தேவானந்த, அனுர குமார நாணயக்கார, மேல்மாகாண ஆளுநர் கலாநிதி ஹேமா குமார உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டிருந்தனர்.