இலங்கையில் ஆரம்ப வர்த்தக முயற்சிகளுக்கான முன்னணி மாநாடு மற்றும் புத்தாக்கத் திருவிழா நிகழ்வான Disrupt Asia நிகழ்வின் 2018 ஆம் ஆண்டு நிகழ்வானது அண்மையில் மருதானை Trace - Expert City ஊவைல இல் வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளதுடன்,இலங்கையில் வளர்ச்சி கண்டு வருகின்ற ஆரம்ப வர்த்தக முயற்சிகள் தொடர்புபட்ட பெரும் எண்ணிக்கையானோர் இதில் பங்குபற்றியுள்ளனர்.

இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் அமைப்பினால் (ICTA) ஏற்பாடு செய்யப்பட்ட Disrupt Asia 2018  நிகழ்வானது நாட்டில் ஆரம்ப வர்த்தக முயற்சிகளை விஸ்தரித்து, வளர்ச்சியின் அடுத்த அலையை ஊக்குவிப்பதில்,அதன் மேம்பட்ட ஒரு முயற்சியாக அமையப்பெற்றுள்ளது.

Disrupt Asia 2018 நிகழ்வின் அங்கமான புத்தாக்கத் திருவிழா இந்த ஆண்டு நிகழ்வில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கூடுதல் அம்சமாக அமைந்துள்ளதுடன் மேம்பட்ட உதவு தொழில்நுட்பங்கள்,பொதுமக்கள் இடைத்தொடர்பாடி அனுபவிக்கும் வாய்ப்பினை வழங்கிய கலை மற்றும் டிஜிட்டல் செயற்பாடுகளின் பணிகள் அடங்கலாக பல்வேறு தொழில்நுட்பவியல் புத்தாக்கங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.

நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரையும்,குறிப்பாக இளம் தலைமுறையினரை இத்திருவிழா நிகழ்வு ரூடவ்ர்த்ததுடன்ரூபவ் திருவிழாவின் சூழலையும்,அங்கு காண்பிக்கப்பட்ட பல்வேறுபட்ட புத்தாக்க அம்சங்களையும் அவர்கள் வியப்புடன் அனுபவித்ததாக குறிப்பிட்டுள்ளனர்.மாநாடு மற்றும் புத்தாக்கத் திருவிழாவில் கலந்துகொண்ட பல்லாயிரக்கணக்கானவர்கள் மத்தியில் நாட்டின் அனைத்துப் பாகங்களிலிருந்தும் கலந்துகொண்ட இளைஞர்,யுவதிகள் பெருமளவில் அடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

அவர்கள் Disrupt Asia 2018 நிகழ்வின் பல்வேறு அம்சங்களையும் விசேடமாகப் பாராட்டியிருந்தனர். யாழ்ப்பாணத்திலிருந்து கலந்துகொண்ட,உயர் தரப் பரீட்சையைப் பூர்த்தி செய்த,ஆனால் பல்கலைக்கழக அனுமதிக்கான வாய்ப்பினைப் பெற்றிராத அல்லது எந்தவொரு தொழிற்கல்வியையும் பெற்றிராதவர்களைக் கொண்டவர்களுக்காக விரைவுபடுத்தல் கற்றை செயற்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு முழுமையான புலமைப்பரிசில் திட்டமான “Uki - Stepping Stone to Tech Life” இன் இளைஞர்,யுவதிகளும் இதில் அடங்கியிருந்தனர். ஏனைய தொழில்முயற்சியாளர்கள் மற்றும் ஆரம்ப வர்த்தக முயற்சி நிறுவனங்களுடன் தாங்கள் இடைத்தொடர்பாட வாய்ப்புக் கிடைத்தமை தங்களுக்கு மிகுந்த ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது என்பதை அவர்கள் விபரித்ததுடன்,பல்வேறு தொழில்நுட்பத் துறை சார் பிரபலங்களுடன் நீண்ட கால அடிப்படையில் முன்னெடுக்க வாய்ப்புள்ள தொடர்புகளையும் தாங்கள் ஏற்படுத்திக் கொண்டுள்ளதாகவும், பொது மேடைச் பேச்சு,தமது திட்டத்தை முன்வைக்கும் படைப்பாக்க திறமைகள் போன்ற திறன்களையும் தாங்கள் பட்டை தீட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

கொட்டுகொட கலாநிதி குலசிங்க மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்களும் கண்காட்சியில் பங்குபற்றியுள்ளதுடன்ரூபவ் புத்தாக்கத் திருவிழாவின் மூலமாக தமக்கு கிடைக்கப்பெற்ற அனுபவத்தையிட்டு மிகவும் ஈர்க்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். 

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் தொடர்பில் கற்றுக்கொள்வதற்கு தாங்கள் மிகுந்த ஆர்வம் கொண்டவர்களாக உள்ள நிலையில்,படைப்பாக்கத்திறன் சார்ந்த கண்காட்சிக்கூடத்தில் காண்பிக்கப்பட்ட பல்வேறுபட்ட விளையாட்டு தொழில்நுட்பங்களை நேரடியாக காண்பதற்கு வாய்ப்புக் கிடைத்ததை ஒரு வரப்பிரசாதம் எனவும் குறிப்பிட்டனர். 

உள்நாட்டுரீதியாக அபிவிருத்தி செய்யப்பட்ட பல்வேறு விளையாட்டு தொழில்நுட்பங்களை காண்பிப்பதற்கு படைப்பாக்கத்திறன் கண்காட்சிக்கூடமானது இலங்கையின் அனைத்து பாகங்களையும் சார்ந்த விளையாட்டு தொழில்நுட்ப உருவாக்குனர்களுக்கு களம் அமைத்துக் கொடுத்து,உள்நாட்டு விளையாட்டு தொழில்நுட்ப அபிவிருத்தி சமூகத்தை ஊக்குவித்துள்ளது. 

Kodex இன் "Koombiyo"RAM Studios,சுயுஆ ளுவரனழைள இன் "Extraction Valley"Motion Miraclesஇன் "Zombie Rage" மற்றும் RFactory இன்Ceylon Driver ஆகியன அவற்றுள் குறிப்பிடத்தக்க சில விளையாட்டு தொழில்நுட்பங்களாக அமையப்பெற்றன.

இலங்கையில் ஆரம்ப வர்த்தக முயற்சிகள் மத்தியில் ஒரு இணைப்பை ஏற்படுத்தி,அவை தொடர்ந்தும் சிறப்பாக செயற்படுவதை ஊக்குவிக்கும் வகையில் இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் அமைப்பினால் கடந்த காலங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ள பல்வேறு செயற்திட்டங்களில் ஒன்றாகDisrupt Asia அமைந்துள்ளது. புதிய தொழில்நுட்ப வர்த்தக முயற்சிகளுக்கு உதவுவதை இலக்காகக் கொண்ட,தொழில்நுட்ப ஆரம்ப வர்த்தக முயற்சி உதவு செயற்திட்டமான "Spiralation"என்ற இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் அமைப்பின் பிரதான செயற்திட்டமானது 2010 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு தற்போதும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

வழிகாட்டல், திறன் அபிவிருத்தி, சர்வதேச மற்றும் உள்நாட்டு அனுபவம் அடங்கலாக நிதியுதவி மற்றும் ஏனைய பயன் உதவித் திட்டங்களின் மூலமாக இக்காலப்பகுதியில் 56 நிறுவனங்களுக்கு இச்செயற்திட்டத்தின் கீழ் உதவிகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

அவ்வாறே,இலங்கையில் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள் மத்தியில் தொழில் முயற்சி சிந்தனையை ஆரம்பித்து,மேம்படுத்தும் இலக்குடன் ImagineIF என்ற செயற்திட்டத்தையும் இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் அமைப்பு முன்னெடுத்து வருகின்றது. 2018 ஆம் ஆண்டில் அனைத்து தேசிய பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களும் பங்கெடுக்க ஏதுவாக பகிரங்க அழைப்புடன் ஆறு தேசிய பல்கலைக்கழகங்களில் இச்செயற்திட்டம் ஏற்பாடு செய்யப்படவுள்ளது.

தொழிற்துறை மேம்பாடு சார்ந்த இந்த முன்னெடுப்புக்களின் மூலமாக கிடைக்கும் நற்பயன்கள் தொடர்பில் இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் அமைப்பின் (ICTA)செயற்திட்ட முகாமையாளரான அஹமட் நிஷாத் அவர்கள் கருத்து வெளியிடுகையில்,“ஆரம்ப வர்த்தக முயற்சிகள் தமது பயணத்தை வெற்றிகரமாக முன்னெடுக்கும் வகையில் திட்டமிடுவதற்கு அவர்களுக்கு வழிகாட்டும் முக்கியமான பாத்திரத்தை Disrupt Asia செயற்திட்டம் வகித்து வருவதுடன்,இதன் மூலமாக கிடைக்கும் நன்மைகளை தொடர்ந்தும் விஸ்தரித்து வருகின்றது.

ICTA  இன் உதவிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் ஈடுபடுத்தும் Spiralation மற்றும் ImagineIF போன்ற ஏனைய தொழிற்துறை மேம்பாட்டு முன்னெடுப்புக்களுடன் இலங்கையில் ஆரம்ப வர்த்தக முயற்சிகள் தற்போது தெளிவான இலக்கில் பயணிப்பதுடன், நீண்ட கால அடிப்படையில் நற்பயன்களை பெற்றுத்தரும் செயற்பாடுகள் மீது கவனம் செலுத்தியுள்ளது. 

இலங்கையில் உள்ள ஆரம்ப வர்த்தக முயற்சிகள் பிராந்திய மற்றும் சர்வதேசரீதியாக போட்டித்திறன் கொண்டவையாக திகழ்வதற்கு அவற்றை முன்னேற்றுவதற்கு மேற்குறிப்பிட்ட வழிகளிலான உதவிகளே தேவையாக அமைந்துள்ளன,”என்று குறிப்பிட்டார்.

தொலைதொடர்பாடல்,டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் அமைச்சு Disrupt Asia 2018 நிகழ்விற்கு ஆதரவு வழங்கியிருந்தது. கொள்கை மற்றும் மூலோபாயம் ஆகியவற்றிற்கான தேவை தொடர்பில் நிகழ்வின் அங்கமான மாநாட்டில் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன்,வர்த்தக முயற்சிகளில் காலடியெடுத்து வைக்க விரும்புகின்றவர்களுக்கு மற்றும் தற்போது அவற்றை முன்னெடுக்கின்றவர்களுக்கு உந்துசக்தியளிக்கும் வகையில் தொழில் முயற்சியாளர்கள் தமது உள்ளார்ந்த அறிவு,வெற்றிகள் மற்றும் தோல்விகள் தொடர்பான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். 

அமெரிக்கா, நெதர்லாந்து, ஐக்கிய இராச்சியம் சிங்கப்பூர்,பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ்,இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து கலந்து கொண்ட பல வல்லுனர்கள் செயற்கை நுண்ணறிவு (AI), டிஜிட்டல் சந்தைப்படுத்தல்,பாதுகாப்பு ஆகிய துறைகளில் தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளதுடன், STEAM கல்வி, படைப்பாக்கத்திறன் மிக்க தொழிற்துறைகள் மற்றும் சமூக தொழில் முயற்சியாண்மை தொடர்பில் அதிரடியான சிந்தனைகளை வெளிக்கொணருவதற்கான கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.