இந்தியா, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அரசு அலுவலகம் ஒன்றில் பணியாற்றி வந்தவர் ஷேக் மைதீன். இவருக்கும் முபீனா என்பவருக்கும், கடந்த வாரம் திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்த பின்னர், அன்று மாலை மாப்பிள்ளை மிகவும் வருத்தமுடன் காணப்பட்டார்.
இதுகுறித்து விளக்கம் கேட்ட மாப்பிள்ளையின் தாயார், திருமணத்திற்கு முன் புதுப்பெண் உண்மையான புகைப்படத்தை அளிக்கவில்லை என்று அறிந்து கொண்டார். தற்போது நேரில் பார்த்த போது, தனது மனைவி அழகாக இல்லை என்று வருத்தப்பட்டார்.
இதையடுத்து தாயார் சமாதானம் செய்தார். உடனே மருமகளுக்கு தோல் மருத்துவர் ஒருவரிடம் சிகிச்சைக்கு பரிந்துரை செய்துள்ளார். ஆனாலும், மைதீனிற்கு சோகம் தாங்க முடியவில்லை. இந்நிலையில் இரவு, நண்பரின் வீட்டுக்குச் சென்று, அங்கேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அச்சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM