பொகவந்தலாவ கெம்பியன் மேற்பிரிவு தோட்டபகுதியில் இரண்டு ஆலயங்கள் இனந்தெரியதாவர்களால் உடைக்கபட்டு கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இக் கொள்ளை சம்பவம் இன்று அதிகாலையில் இடம் பெற்றதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது; 

பொகந்தலாவ கெம்பியன் மேற்பிரிவு தோட்டபகுதியில் உள்ள முருகன் ஆலயம் ஒன்றும், ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயம் ஒன்றும் இவ்வாறு உடைக்கபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முருகன் ஆலயத்தில் இருந்து தங்க நகைகள் மற்றும் உண்டியலில் வைக்கபட்டிருந்த பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும் இதேவேளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் உள்ள தங்க நகைகளையும் கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இன்று 06.30மணி அளவில்  கெம்பியன் மேற்பிரிவு தோட்டபகுதியை சேர்ந்த நபர் ஒருவர் குறித்த முருகன் ஆலயத்தின் ஊடாக சென்று கொண்டிருந்த வேலை முருகன் ஆலயத்தின் கதவுகள் திறந்த நிலையில் கானபட்டதென தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து பொலிஸாருக்கு வழங்ப்பட்ட தகவலுக்கு அமைய பொலிஸ் மோப்பநாய் மற்றும் தடையவியல் பொலிஸார் ஆகியோர் வரவலைக்கபட்டு விசாரனைகள் ஆரம்பித்துள்ளதோடு இதுவரையிலும் சந்தேகநபர் எவரும் கைது செய்யபடவில்லையென பொகவந்தலாவ பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

 எனினும் கெம்பியன் மேற்பிரிவு தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் இதற்கு  முன்பு மூன்று தடவைகள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.