நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா சாஞ்சிமலை கீழ் பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த 36வயது மதிக்கதக்க பெண் ஒருவர் துபாய் நாட்டில் பணிபெண்ணாக வேலை செய்த வீட்டில் துக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பிரேத பரிசோதனையின் மூலம் தெரியவந்துள்ளது. 

கடந்த ஜனவரி மாதம் 19ம் திகதி துபாய் நாட்டில் மரணமடைந்துள்ள காளிமுத்து சிகப்பி என்ற பெண் அவரது குடும்பத்திற்கு மார்ச் மாதம் 05ம் திகதி நோர்வூட் பொலிஸாரின் ஊடாக தகவல் வழங்கபட்டிருந்தது.

இதனையடுத்து, இலங்கையில் உள்ள கட்டுநாயக்கா விமான நிலைய பொலிஸாரின் உதவியோடு காளிமுத்து சிகப்பியின் சடலம் இலங்கை நாட்டுக்கு மார்ச் 11ம் திகதி துபாயில் இருந்து கொண்டு வரபட்டது.

சிகப்பியின் மரணம் தொடர்பில் அவருடைய கணவருக்கு ஏற்பட்ட சந்தேகம் காரணமாக நேற்று நீர்கொழும்பு வைத்தியசாலையில் பிரதே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

இதன்போது, குறித்த பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பிரதே பரிசோதனையில் தெரியவந்ததையடுத்து, காளிமுத்து சிகப்பின் இறுதி கிரியைகள் டிக்கோயா சாஞ்சிதலை கீழ்பிரிவு தோட்ட பொதுமையானத்தில் நல்லடக்கம் செய்யபட்டது.

பொகவந்தலாவ நிருபர்