அனு­ரா­த­புரம் சிறைச்­சா­லையில் உண்­ணா­வி­ரதமிருக்கும் தமிழ் அர­சியல் கைதி­களின் வழக்­குகள் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­ப­டா­தமை  மற்றும் கால தாம­தங்கள் குறித்து நான் உட­ன­டி­யாக கவனம் செலுத்­து­கின்றேன் என சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

அதேபோல் உண்­ணா­வி­ரதம் இருக்கும் அர­சியல் கைதி­களின் விவ­காரம் குறித்து இன்னும் இரண்டு அல்­லது மூன்று தினங்­க­ளுக்குள் நட­வ­டிக்கை எடுக்­கின்றேன்.  

யுத்த கால­கட்­டத்தில் கைது­செய்­யப்­பட்ட அர­சியல் கைதிகள் பலர் பொது மன்­னிப்பின் அடிப்­ப­டையில் விடு­விக்­கப்­பட்­டுள்­ளனர். எனினும் இப்­போதும் தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்ள நபர்கள் பாரிய குற்­றங்­களின் பெயரில் கைது­செய்­யப்­பட்­ட­வர்கள். அவர்­களை விடு­தலை செய்­வது கடி­ன­மா­னது எனவும் தெரிவித்தார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே சட்டமா அதிபர் மேற்கண்ட விடயத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் இச்  சந்திப்பின்போது சுமந்­திரன் எம்.பி.யிடம் இருந்த அர­சியல் கைதி­களின் விப­ரங்­களையும் அவர் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.