இந்தியாவில் இருந்து வருகை தந்திருந்த முக்கிய பிரதிநிதிகளுடன் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இரகசிய சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

இந்தியாவின் சட்டத்தரணி ராதாகிருஸ்ணன், கவிஞர் இனியபாரதி, தினமணி பத்திரிகையின் ஆசிரியர் ஆகியோருடன் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இச்சந்திப்பு இடம்பெற்றிருந்த நிலையில் ஊடகவியலாளர்களுக்கு தகவல் வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பில்  வட மாகாண விவசாய அமைச்சர் க. சிவநேசன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, வட மாகாணசபை உறுப்பினர்களான ப. சத்தியலிங்கம், ஜி.ரி. லிங்கநாதன், து. ரவிகரன் வவுனியா வடக்கு மற்றும் தமிழ் தெற்கு பிரதேச சபைகளின் தலைவர்கள், வவுனியா கல்வியில் கல்லூரியின் பீடாதிபதி மற்றும் முன்னாள் பீடாதிபதி உட்பட முக்கியமான சிலரே இவ்வாறு இரகசியமாக கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது வட பகுதி நிலைமைகள் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் விடயங்கள் தொடர்பாக அதிகமாக ஆராயப்பட்டதாக தெரியவருகின்றது.