உயிருக்கு ஆபத்துள்ளது என்ற காரணத்திற்காக மக்களை ஒருபோதும் சிந்திக்காமல் இருக்க மாட்டேன்.நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு  தீர்வு கிடைக்கும் வரையில் தொடர்ந்தும்  போராடுவேன்  என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷ தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தின்  முக்கிய  தரப்பினரை  கொலை செய்யும் சதி திட்டங்கள் கடந்த காலங்களில்  இடம் பெற்றது ஆனால் அவைகள் பெரிதளவில் பேசப்படவில்லை ஆனால் தற்போது  நாட்டு தலைவரை கொலை செய்யும் சதிதிட்டம் அரசாங்கத்தின் பலவீனத்தை வெளிப்படுத்துவதால் அவை பெரிதளவில் பேசப்படுகின்றது எனவும் குறிப்பிட்டார்.

கொழும்பில் இன்று ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.