தாமரைக் கோபுர கட்டுமான பணிகள் எதிர்வரும் 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதமளவில் நிறைவு பெறும்  என இலங்கை தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கட்டுமான பணிகள் நிறைவடைந்த பின்னர் தெற்காசியாவிலேயே மிகவும் உயரமான கட்டிடமாக தாமரைக் கோபுரம் காணப்படும் என இலங்கை தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணையாளர் சுனில் சிறிசேன தெரிவித்துள்ளார்.

தாமரை கோபுரத்தின் கட்டுமான பணிகளை பூர்த்திசெய்வதற்கு எதிர்பார்த்ததை விடவும் மேலதிக நிதி தேவைப்படுமென சுட்டிக்காட்டிய ஆணையாளர் அதற்கான நிதியை வழங்க சீன அரசு வழங்கவில்லை என தெரிவித்தார். 

350 மீட்டர் உயரமான தாமரை கோபுரமானது தொலைதொடர்பு மற்றும் அவதானிப்பு பணிகளுக்கு பயன்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.