(எம்.மனோசித்ரா)

அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் நாட்டில் சிங்கள இனவாதத்தை தூண்ட அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றனர். இதேவேளை அரசியல்கைதிகளை வைத்துகொண்டு தனிப்பிட்ட அரசியல் நோக்கங்களை நிறைவேற்றி கொள்வதாக அரசியல் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்தார்.

நாட்டில் முதலில் சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுகொடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

அநுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருக்கும் அரசியல்கைதிகள் தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.