தமிழகத்திலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்ப முயன்ற பெண் உட்பட மூவர் கைது

Published By: Digital Desk 4

26 Sep, 2018 | 04:37 PM
image

தமிழகத்திலிருந்து சட்ட விரோதமாக இலங்கைக்கு தப்ப முயன்ற பெண் உட்பட மூவர் சுங்கத்ததுறை அதிகாரிகளளால் கைது செய்பட்டுள்ளனர். கைது செய்யப்படவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தமிழகத்தின் தங்கச்சிமடம் கடற்பகுதியிலிருந்து சட்ட விரோதமாக இலங்கைக்கு அகதிகள் செல்லவுள்ளதாக இராமநாதபுரம் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து  இன்று புதன்கிழமை அதிகாலை 1 மணியளவில் இராமேஸ்வரம் தனியார் தங்கும் விடுதிகளில் சோதனை நடத்தினர்.

அப்போது சந்தேகத்திற்குரிய முறையில் விடுதியில் தங்கியிருந்த இலங்கை பெண் ஒருவரை பிடித்து விசாரணை செய்த போது அவர் கொழும்பைச் சேர்ந்த 42 வயதான ரமணி என தெரிய வந்தது.

அவர் சட்ட விரோதமாக படகில் இலங்கைக்கு தப்பி செல்ல இருந்தது விசாரனைகளின் மூலம் தெரிய வந்தததையடுத்து ரமணி மற்றும் இலங்கைக்கு செல்ல தரகராக செயற்பட்ட தங்கச்சிமடத்தை சேர்ந்த ஆல்வின், வாகன ஓட்டுநர் ஒருவர் உட்பட  மூவரையும் கைது செய்த இராமநாதபுரம் சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து இராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கைது செய்யப்பட்ட ரமணியிடம் சுங்க துறையினர் விசாரணை செய்த போது தான் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் திருச்சி கல்லூரியில் படிக்கும் தனது மகளை பார்பதற்க்காக விமானம் மூலம் திருச்சி வந்ததாகவும் விசா காலம் முடிந்த காரணத்தால் சட்டவிரோதமாக கள்ள தோணில் யாழ்பாணம் செல்வதற்க்காக தங்கச்சிமடத்ததை சேர்ந்த ஆல்வின் என்பவரிடம் 30 ஆயிரம் ரூபாய் கொடுத்தாகவும் ஆனால் அவர் ப்ளாஸ்டிக் படகிற்க்கு பதிலாக நாட்டுபடகில் செல்ல சொன்னதால் எனக்கு பயம் ஏற்ப்பட்டது.

 எனவே இரண்டு நாட்கள் இராமேஸ்வரத்தில் தங்கி பின்னர் ப்ளாஸ்டிக் படகு கிடைத்த உடன் இலங்கைக்கு செல்ல இருந்ததாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் மேலதிக விசாரணைகளை சுங்கத்ததுறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04