(இரோஷா வேலு) 

உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின் பிரகாரம் உலகளாவிய ரீதியில் நாள் ஒன்றுக்கு 600க்கும் அதிகமான கருக்கலைப்பு மேற்கொள்ளப்படுகின்றது. இதில் 50 வீதத்துக்கும் அதிகமானவை தெற்காசிய நாடுகளிலேயே மேற்கொள்ளப்படுகின்றது என  குடும்ப சுகாதார பணியகத்தின் சமூக மருத்துவ ஆலோசகர் வைத்தியர் எஸ்.எஸ்.பி.கோடகந்தகே தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பற்ற கருக்கலைப்பின் பின்னரான சுகாதார தேவைகளை பெற்றுக் கொடுப்பதற்காக வருடாந்தம் 553 மில்லியன் அமெரிக்க டொலர்கள் உலகளவில் செலவழிக்கப்படுகின்றது எனவும் குறிப்பிட்டார். 

தேசிய குடும்ப கட்டுப்பாட்டு தினத்தை முன்னிட்டு ‘திட்டமிடல் எனும் ஒழியினால் வாழ்வின் இருளை களைவோம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் குடும்ப சுகாதார பணியகத்தின் ஏற்பாட்டில் இன்றையதினம் கொழும்பு வோட்டஸ்ஏஜ் ஹோட்டலில் இடம்பெற்ற கருந்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே வைத்தியர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.