சூடு வைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் : தந்தையும் வளர்ப்புத் தாயும் கைது

Published By: Robert

13 Mar, 2016 | 01:46 PM
image

மட்டக்களப்பு - காத்தான்குடிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 6ம் குறிச்சி பகுதியில் 10 வயதுடைய சிறுமியொருவருக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்தியதாக கூறப்படும், சம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தையும் வளர்புத் தாயும் இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

காத்தான்குடி - ஆறாம் குறிச்சி பதுறியா பகுதியில் வசிக்கும் சிறுமியொருவருக்கு அவரது வளர்ப்புத் தாய் நெருப்பால் சூடு வைத்ததாகவும் இதனால், அவரது உடம்பில் எரிகாயம் காணப்படுவதாகவும், காத்தான்குடி பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்புப் பிரிவுக்கு கடந்த வெள்ளிக்கிழமை (11) தகவல் கிடைத்தது. 

இதனைத் தொடர்ந்து, காத்தான்குடி பிரதேச செயலக சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சிறுமியின் வீட்டுக்குச் சென்று அவரை விசாரித்ததுடன், சிறுமியின் தந்தை மற்றும் வளர்ப்புத் தாயிடமும் விசாரணை செய்தனர். 

பின்னர், சிறுமியை சிகிச்சைக்காக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்ததோடு, தந்தையையும் தாயையும் கைதுசெய்துள்ளதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த சிறுமியின் தாய் சுகவீனமுற்ற நிலையில் சுமார் 3 வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்ததால், சிறுமியின் தந்தை மற்றுமொரு திருமணம் செய்துகொண்டுள்ளார். 

இதன்படி முதல் மனைவியின் இரண்டு பிள்ளைகளும் வளர்ப்புத் தாயிடம் வளர்ந்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா?...

2026-07-10 17:52:32
news-image

தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள்...

2026-07-10 18:07:24
news-image

பொரளை மெகசின் சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே...

2026-07-10 17:36:54
news-image

சமல் ராஜபக்ஷவின் நிறுவனத்தால் அரசுக்கு 3.5...

2026-07-10 18:00:12
news-image

களனி கங்கையைப் பாதுகாப்பதற்கு வீடமைப்பு மற்றும்...

2026-07-10 16:52:31
news-image

சிறைச்சாலையில் மோதல் : அமைச்சரின் திட்டமிடல்...

2026-07-10 16:51:57
news-image

நாமல் ராஜபக்ஷ ‘ஏ – டீம்...

2026-07-10 16:51:18
news-image

ஒட்டிப்பிறந்த இரட்டையர்களைப் பிரித்து பேராதனை வைத்தியர்கள்...

2026-07-10 16:39:41
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறைக்கு நீதியும் பொறுப்புக்கூறலும்...

2026-07-10 16:29:24
news-image

'முழு நாடும் ஒன்றாக' தேசிய செயற்திட்டம்...

2026-07-10 16:30:04
news-image

வாசனை சவர்க்காரத்திற்குள் நூதனமான முறையில் போதைப்பொருள்...

2026-07-10 16:30:06
news-image

வெளி இடங்களிலிருந்து யாழ். நகர் பகுதியில்...

2026-07-10 16:07:10