''உங்களது அழுக்குகளை பொதுமக்கள் முன்னிலையில் சலவை செய்ய வேண்டாம்” என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர வீரருமான மஹேல ஜெயவர்தன தெரிவித்துள்ளார். 

இலங்கை கிரிக்கட் நிறுவனத்தில் சமீபகாலமாக இடம்பெற்றுவரும் சம்பவங்கள் தொடர்பில் ஆத்திரமடைந்துள்ள மஹேல, தனது டுவிட்டர் பக்கத்தில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் டுவிட்டரில் குறிப்பிடுகையில், 

கடந்த சில நாட்களாக இலங்கை கிரிக்கெட்டில் நடந்துள்ள விடயங்களும் அதற்கான தீர்வுகளும் கடினமானவை. ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும், உங்களது அழுக்குகளை பொதுமக்கள் முன்னிலையில் சலவை செய்ய வேண்டாம்.

உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் தீர்மானங்கள் எந்த சந்தர்ப்பத்திலும் சரியானதாக அமையாது. எது சிறந்தது என்பது தொடர்பில் சிந்திப்பதே இலங்கை கிரிக்கட்டுக்கு சிறந்த தீர்மானம்.  உணர்ச்சிவசப்பட்டு தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டாம் எனவும் மஹேல தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.