அ.தி.மு.க அரசை விமர்சனம் செய்தால் எமது நாக்கை அறுத்துவிடுவார்களா?

Published By: R. Kalaichelvan

26 Sep, 2018 | 03:32 PM
image

மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அதிரடி கேள்வி

அ.தி.மு.க அரசை விமர்சனம் செய்தால் எமது நாக்கை அறுத்து விடுவார்களா? என மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.இது தொடர்பாக அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.

ஈழத்தமிழர்களின் படுகொலைக்கு காங்கிரஸ் தி.மு.க கட்சிகளே காரணம். ஏழு பேர் உயிரை வைத்து அரசியல் செய்யவேண்டாம். 

ஏழு பேர் சிறையில் வாடுவதற்கு காங்கிரஸ் கட்சி தான் காரணம். ஏழு பேரை ஆளுநர் விடுவித்தால் விடுவிக்கட்டும். இல்லையேல் சிறையில் இருக்கட்டும். இதனை அரசியலாக்கவேண்டாம்.  

ஏழு பேரையும் விடுவிக்கக்கூடாது என காங்கிரஸ் திட்டவட்டமாக சொல்லியிருக்கிறது. இந்த விவகாரத்தில் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் பதில் என்ன? அதே சமயத்தில் தமிழக அமைச்சர்கள் தங்களின் பொறுப்பை உணர்ந்து பேசவேண்டும்.

 பொறுப்பற்ற முறையில் பேசக்கூடாது.அதிமுக அரசை நான் விமர்சனம் செய்தால் எமது நாக்கை அறுத்துவிடுவார்களா? என கேள்வி எழுப்பினார்.

முன்னதாக அமைச்சர் துரைக்கண்ணு, அ.தி.மு.க அரசை லஞ்ச ஆட்சி என்று யாராவது விமர்சனம் செய்தால் அவர்களின் நாக்கை அறுத்துவிடுவேன் என்று பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே ராஜீவ் கொலை குற்றவாளிகள் ஏழு பேரை விடுவிக்கக்கூடாது என்று அந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பதினைந்து குடும்பத்தினர் இன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்தித்து மனு அளித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17