வட கொரிய அதிபர் கிம் ஜோங் - உன்னை இரண்டாவது முறையாகவும் சந்திக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

73ஆவது ஐ.நா பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா வந்திருந்த தென் கொரிய அதிபர் மூன் - ஜே இன்னுடன் பேச்சுவார்த்தை நடாத்தியதன் பின்னரே ட்ரம்ப் இவ்வறிவிப்பை வெளியிட்டார்.

சந்திப்பு தொடர்பில் ட்ரம்ப்

“எங்களது இரண்டாவது சந்திப்பிற்கான இடம் நேரம் ஆகியவை குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறோம்.

இது தொடர்பான தகவல் விரைவில் அறிவிக்கப்படும்.

அணு ஆயுதங்களை கைவிடும் நடவடிக்கைகளில் மெத்தனம் காட்டினாலும் குறித்த விடயம் தொடர்பான விவாதங்களுக்கு மிக அருமையான மனிதராக கிம் - ஜோங் உன் தயாராகவுள்ளார். இவ் விடயம் பாராட்டத்தக்கது.” என்றார