ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்காவிட்டால் எரிபொருட்களின் விலைகள் உயர்வடையாது என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் ஐ.நா பொதுச் சபை அமர்வில் தெரிவித்தார்.

உலக சந்தையில் எரிபொருளின் விலைகள் அதிகரித்துச் செல்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விடுத்த கண்டனத்திற்கே மக்ரோன் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.

“ட்ரம்ப் தனது தர்க்கத்திலிருந்து விடுபட்டு ஒரு முடிவுக்கு வருவாராயின் ஈரான் மசகு எண்ணெய்யை விற்பனை செய்யும் அதனூடக எரிபொருட்களின் விலைகள் தொடர்பாக ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் இதுவே பொருளாதார யதார்த்தம்” என மக்ரோன் மேலும் தெரிவித்தார்.