ஆறாவது இருபதுக்கு 20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டி கடந்த 8 ஆம் திகதி ஆரம்பமாகியது. இதன் தகுதிகான் சுற்று ஆட்டங்கள் இன்றுடன் நிறைவடைகின்றது.

'சூப்பர் 10" சுற்றுக்கு முன்னேறும் இன்னொரு அணி எது என்பது இன்று தெரியும். 'ஏ" பிரிவில் இன்று நடைபெறும் இறுதி தகுதிகான் சுற்று போட்டிகளில் அயர்லாந்து, நெதர்லாந்து, பங்களாதேஷ், ஓமன் அணிகள் மோதுகின்றன. 

அயர்லாந்து, நெதர்லாந்து அணிகள் ஏற்கனவே வாய்ப்பை இழந்து விட்டன. இதனால் அந்த அணிகள் மோதும் ஆட்டத்தில் எந்த பலனும் இல்லை.

பங்களாதேஷ்,  ஓமன் மோதும் போட்டியில் வெற்றி பெறும் அணி 'சூப்பர் 10" சுற்றுக்கு தகுதி பெறும். பங்களாதேஷ் அணி ஓமனை வீழ்த்தி முதன்மை சுற்றுக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது. அயர்லாந்து மோதிய ஆட்டம் மழையால் ரத்து ஆனது.

ஓமன் அணி தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்தை அதிர்ச்சிகரமாக வீழ்த்தியது. நெதர்லாந்துடன் மோதிய ஆட்டம் மழையால் ரத்து ஆனது. பங்களாதேஷ்ற்கும் அதிர்ச்சி கொடுக்கும் ஆர்வத்துடன் ஓமன் காத்திருக்கிறது.

இரு அணிகளும் இருபதுக்கு 20 போட்டியில் முதல் முறையாக இன்று மோத இருக்கின்றன.