எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் இன்று மாலை 3 மணியளவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அலரிமாளிகையில் சந்தித்து கலந்துரையாட உள்ளனர்.

உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பிலேயே இதன்போது கலந்துரையாட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.