சம்பரகமுவ மாகாணத்தில் பெலிகுல் ஓயா மற்றும் உலக முடிவு (Belihul-Oya to World’s end ) காணப்படும் மலைத் தொடர் பகுதிகளுக்கு இடையில் கேபிள் கார் சேவை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சம்பரகமுவ மாகாண ஆளுநர் நிலுக்கா ஹேக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜப்பானின் நிதியுதவியின் கீழ் இந்த திட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தர்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்,

பெலிகுல் ஓயா மற்றும் உலக முடிவு பகுதிகள் சுற்றுலா பயணிகளை அதிக கவர்ந்த இடமாகும். இந்நிலையில் இப்பகுதியில் கேபிள் கார் சேவை அமைக்க டுபாய் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம்.

இந்த திட்டத்துக்கான ஆலோசனைகளை சம்பரகமுவ பல்கலைக்கழகத்தின் புத்திஜீவிகளிடம் இருந்து பெற்றுக்கொண்டுள்ளோம்.

இதன் மூலம் குறித்தப் பகுதியில் சுற்றுலா பிரயாணிகளின் வருகை மேலும் அதிகரிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கலந்துரையாடியதாகவும், சிவனொளிபாத மலை தவிர்ந்த ஏனைய மலைப்பகுதிகளில் எங்கு வேண்டுமென்றாலும் கேபிள் கார் சேவையை செயற்படுத்தலாம் என ஜனாதிபதி தெரிவித்தாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.