பெண்ணிடம் தகாத முறையில் நடந்த குற்றச்சாட்டின் பேரில் 81 வயதான அமெரிக்காவின் பிரபல நகைச்சுவை நடிகருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பென்சில் வேனியாவை சேர்ந்த நகைச்சுவை நடிகர் பில்கோஸ்பை மது போதையில் கடந்த 2004ஆம் ஆண்டு தனது குடியிருப்பு பகுதியில் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டார் என முறைப்பாடு செய்யப்பட்டு அவருக்கெதிராக வழக்கு தொடரப்பட்டது.

குறித்த வழக்கில் பில்கோஸ்பை குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து 3 தொடக்கம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.