நீர் நிரம்பிய வாளியொன்றுக்குள் தவறுதலாக விழுந்த குழந்தையொன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் நேற்று மாலை 3.30 மணியளவில் கொழும்பு பம்பலப்பிட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இச் சம்பவத்தில் 4 வயதுடைய பெண் பிள்ளையே பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

குறித்த குழந்தை நீர் நிரம்பிய வாளிக்குள் தவறுதலாக விழுந்த போதிலும் உடனடியாக களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போதிலும் அங்கு சிகிச்சை பலனின்றி குறித்த குழந்தை உயிரிழந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பம்பலப்பிட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.