சமையல் எரிவாயு விநியோகஸ்தர்கள் நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத்தீர்மானித்துள்ளனர்.

இந்நிலையில், விநியோகத்திற்கான செலவு வீதங்கள் அதிகரித்துள்ளன. அதற்கேற்ற நிவாரணங்களை பெற்றுக்கொடுக்குமாறு அரசாங்கம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்புகளிடம் கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும் இதுவரையிலும் சாதகமான பதிலில்லை. 

இந்நிலை தொடருமானால் நாடளாவிய ரீதியில் சமையல் எரிவாயு விநியோத்தை முடக்குவதாக  அச் சங்கம் எச்சரித்துள்ளது.

கொழும்பில் சற்று முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அச் சங்கத்தின் தலைவர் சக்தியேந்திர விஜேபுர உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.