பனை மரத்துடன் மோதி விபத்து : ஒருவர் பலி மேலும் ஒருவர் படுகாயம்

Published By: Robert

13 Mar, 2016 | 01:06 PM
image

மன்னார் தோட்டவெளி பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தொன்றில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்து மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் ஏ 14 தலைமன்னார் பிரதான வீதியில் தோட்டவெளி பகுதியில் இன்று அதிகாலை 5:45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

விபத்துக்குள்ளான மீன்களை ஏற்றி செல்லும் கூளர் வாகனத்தில் 3 பேர் பயணித்துள்ளனர். இவர்களில் அனுராதபுரத்தை சேர்ந்த சந்தன தீபால் 46 என்ற குடும்பஸ்தரே சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

மேலும், அஜித் நிசங்க (34) என்பவர் காயங்களுக்குள்ளாகிய நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக தெரியவருவது,

மீன்களை ஏற்றி செல்லும் கூளர் ஒன்று அனுராதபுரத்திலிருந்து மீன்களை ஏற்ற தலைமன்னார் நோக்கி செல்லும்வேளையில் சாரதி வாகனத்தை மிகவேகமாக ஓட்டி சென்றுள்ளார்.

வாகனம் தோட்டவெளி பகுதியில் வந்தபோது வேக கட்டுப்பாட்டை இழந்ததினால் வீதியை விட்டு விலகி வீதியின் ஓரத்தில் உள்ள பனை மரத்துடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. 

எவ்வாறிருப்பினும் வாகனத்தின் சாரதி காயங்களின்றி மயிரிழையில் உயிர் தப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(தலைமன்னார் நிருபர்) 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

22 ஆவது திருத்தம் செவ்வாய் பாராளுமன்றில்...

2026-08-16 08:39:12
news-image

இவ்வாண்டில் பொருளாதார வளர்ச்சி 4 -...

2026-08-16 09:24:32
news-image

சொகுசு காரில் மாடுகள் கடத்தல்: ‘ஐஸ்’...

2026-08-16 08:36:01
news-image

கடுவலை பகுதியில் இன்று விசேட போக்குவரத்து...

2026-08-16 10:06:59
news-image

டெங்கு ஒழிப்பிற்கான வோல்பெக்கியா திட்டம்  ஆரம்பம்

2026-08-16 09:57:27
news-image

ஒரு வருடத்தில் 63 பாதாள உலகக்...

2026-08-16 08:35:00
news-image

மக்களின் ஜனநாயக உரிமைகளைத் திருட இடமளியோம்...

2026-08-16 08:33:16
news-image

வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம்;...

2026-08-16 08:27:38
news-image

வடக்கு கடற்பகுதியில் நிலவும் இந்திய -...

2026-08-16 08:25:11
news-image

ஜனாதிபதியிடமிருந்து நேர்மறையான பதில்கள் கிடைக்கவில்லை -...

2026-08-16 09:10:11
news-image

கல்கிஸ்சை துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த நபர் பலி

2026-08-16 07:58:34
news-image

இன்றைய வானிலை

2026-08-16 06:15:35