சவுதி அரேபியாவின் 88 ஆவது தேசிய தின நிகழ்வு கொழும்பிலுள்ள சங்கரிலா ஹோட்டலில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அப்துல் நாசர் அல்-ஹர்தி தலைமையில் இடம்பெற்றது.

பிரதம அதியாக கலந்து கொண்ட அமைச்சர் றிஸாட் பதியூதீன் கேக் வெட்டி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

இதன் போது குறித்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ,முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, புரவலர் ஹாசிம் உமர் மற்றும் பல பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.