ஆறாவது இருபதுக்கு 20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டி கடந்த 8 ஆம் திகதி ஆரம்பமாகியது. இதன் தகுதிகான் சுற்று ஆட்டங்கள் இன்றுடன் நிறைவடைகின்றது.

இத்தகுதிகான் சுற்றில் 8 அணிகள் பங்கேற்றன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டது. 'ஏ" பிரிவில் பங்களாதேஷ், அயர்லாந்து, நெதர்லாந்து, ஓமன் அணிகளும், 'பி" பிரிவில் சிம்பாபே, ஆப்கானிஸ்தான், ஹாங் கோங், ஸ்கோட்லாந்து அணிகளும் இடம் பெற்றன.

இரண்டு பிரிவிலும் முதல் இடத்தை பிடிக்கும் அணிகள் சூப்பர் 10 சுற்றுக்கு நுழையும்.

'பி" பிரிவில் தகுதிகான் சுற்றின் போட்டிகள் நாக்பூரில் நேற்று முடிவடைந்தன. ஆப்கானிஸ்தான் தான் மோதிய 3 ஆட்டங்களிலும் வென்று முதலிடத்தை பிடித்து சூப்பர் 10 சுற்றுக்கு முன்னேறியது. அந்த அணி கடைசி லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வேயை 59 ரன்னில் வீழ்த்தியது. ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து, ஆங்காங் அணிகள் வெளியேற்றப்பட்டது.

ஆப்கானிஸ்தான் அணி சூப்பர் 10 சுற்றில் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை, மேற்கிந்தியதீவுகள் அணிகள் இடம் பெற்ற குழு 1 பிரிவில் இருக்கிறது.