ஊழல் மற்றும் மோசடி எதிர்ப்பு இயக்கத்தின் பணிப்பாளர் நாமல் குமார வாக்கு மூலம் ஒன்றை வழங்குவதற்காக இன்று மீண்டும்  குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.பயங்கரவாத விசாரணைப்பிரிவின் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா தொடர்பில் வெளிப்படுத்தல் ஒன்றை மேற்கொண்ட ஊழல் எதிர்ப்பு அமைப்பின் செயற்பாட்டு பணிப்பாளர் நாமல் குமார, நாலக டி சில்வாவுக்கு இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடல் தொடர்பில் குரல்பதிவு பிரதியினை இனங்காண்பதற்காக அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் முன்னிலைப்படுத்துவதற்காக நாமல் குமார இன்று அழைக்கப்பட்டுள்ளார்.

நாமல் குமாரவை இராசயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்ன நேற்று உத்தரவிட்டார். 

இந்நிலையில், இன்று காலை 10 மணியளவில் நாமல் குமார குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் இராசயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.