இலங்கை கிரிக்கெட்டின் தெரிவுக்குழு கலைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவினை உடனடியாக கலைத்துவிடுமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா இலங்கை கிரிக்கெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஸ்லி டி சில்வாவிற்கு உத்தரவிட்டுள்ளார் என  தகவல்கள் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்துடன் விளையாடவுள்ள அணியில் மெத்தியூஸை  இணைத்துக்கொள்ளுமாறு விளையாட்டடுத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் சண்டிக ஹதுருசிங்கவின் பங்களிப்பு குறித்தும் ஆராய்ந்துள்ள அமைச்சர் ஆசிய கிண்ணப்போட்டிகளில் ஏற்பட்ட தோல்விகளிற்கு பயிற்றுவிப்பாளரே காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.