வரட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விதைநெல் அல்லது அதற்கான நிதியைப் பெற்றுக் கொள்வதற்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் விவசாய அமைச்சர் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்தபோதும் இதுவரை அவர்களிடமிருந்து எவ்விதமான பதில்களும் கிடைக்கவில்லை என வட மாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடந்த மூன்று வருடங்களாக வடக்கு மாகாணத்தில் நிலவும் வரட்சி காரணமாக விவசாயச்செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறான பாதிப்புக்களால் தமக்கான விதைநெல் இல்லாத நிலையில் பெருமளவான விவசாயிகள் காணப்படுகின்றன.

தற்போது காலபோக செய்கைக்கான முன்னாயத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றபோதும், தமக்கான விதைநெல் பெற்றுத்தர விடுத்த கோரிக்கையினை எவரும் செவிசாய்க்கவில்லை என பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.