இந்தியாவின், தனுஷ்கோடியிலிருந்து சட்டவிரோதமாக படகு மூலம் இலங்கைக்கு தப்பி வர முயற்சித்த பெண் உட்பட இருவரை கைதுசெய்துள்ளதாக ராமநாதபுரம் சுங்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பைச் சேர்ந்த 42 வயதுடைய ரமணி என்ற பெண் சுற்றுலா விசாவில் தமிழ்நாட்டின் திருச்சியில் தங்கியிருந்தார். இந் நிலையில் குறித்த பெண் இன்று அதிகாலை தனுஷ்கோடி வழியாக இலங்கைக்கு தப்பிவர முயற்சித்தபோதே ராமநாதபுரம் சுங்கத்துறையினர் இவரை கைதுசெய்துள்ளனர்.

அத்துடன் இவர் இலங்கைக்கு தப்பிவர உதவி புரிந்த தங்கச்சிமடத்தைச் சேர்ந்த முகவர் ஒருவரையும், இவர் பயணம் மேற்கொண்ட காரின் சாரதியையும் கைதுசெய்த சுங்கப்பிரிவினர் இவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.