சிலாபம் தங்­கொ­ட்டுவ புஜ்யம் ­பொல,திர­ப­ட­கம பகு­தியில் பாழ­டைந்த வீதி­யொன்றில் எரியூட்டப்பட்ட நிலையில் காணப்பட்ட வேன் ஒன்றில் இருந்து கருகிய நிலையில் ஐந்து சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், இன்று ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

மாகதுர பகுதியைச் சேர்ந்த ஐவரே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்ட குறித்த சடலங்கள் தொடர்பான ஆரம்ப கட்ட விசாரணைகள் தங்கொடுவ பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட போதிலும், பின்னர் பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்கக்கோனின் பணிப்புரையின்படி, மேலதிக விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.