அம்பேபுஸ்ஸ இராணுவ முகாமில் கடமையாற்றிய இராணுவ வீரர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய  குற்றச்சாட்டின் அடிப்படையில்  இரு இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த கொலைச் சம்பவம் கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

குறித்த இராணுவ வீரர் கத்தியால் தாக்கி கொலை செய்யப்பட்டமை விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ள இந்நிலையில் இராணுவ முகாமில் காணாமல் போன ரி - 56 ரக துப்பாக்கி ஒன்றும் கொலைக்கு பயன்படுத்திய கத்தியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.