(நா.தினுஷா)

இலங்கையில் தற்போதுள்ள முதியோர்களின் எண்ணிக்கை 2.5 மில்லியனுக்கும் அதிகமாகும். இத் தொகை 2050 ஆகும் போது 30 வீதத்தால் அதிகரிப்பதுடன் 60 வயதுக்கு மேற்ப்பட்ட முதியவர்கள் அநேகமாக தொற்றா நோய்களினால் உயிர் இழப்பதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆய்வு அறிக்கைகள் உளவியல் வைத்திய ஆலோசகர் டாக்டர் தில்ஹார் சமரவீர  தெரிவித்தார்.

கடந்த காலங்களில் இலங்கையில் இருத நோய்களினால் உயிரிழக்கும் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும்  அவர் குறிப்பிட்டார்.  

சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு இன்ற செவ்வாயக்கிழமை கொழும்பு சுகாதார பணிமனையில்  இலங்கை வயோதிப வைத்திய விஞ்ஞான சபை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்தக்கொண்ட உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், 

1946 தொடக்கம் 2012 ஆம் ஆண்டு வரை 60 வயதுக்கு மேற்ப்பட்ட உலகநாடுகளில் உள்ள வயோதிபர்களின் எண்ணிக்கை தொடர்பான கணக்கெடுப்பின் அறிக்கையின் அடிப்படையில் 5.4 வீதத்திலிருந்து 12 வீதம் வரை அதிகரித்துள்ளது. அதேபோன்று 2012 ஆம் ஆண்டின் அறிக்கையின் அடிப்படையில் இலங்கையில் 2.5 மில்லியனுக்கு அதிகமான முதியவர்கள் உள்ளதாக அறிக்கைகளில் பதிவாகியுள்ளன. 2050 ஆம் ஆண்டை அடையும் போது இந்த தொகை 30 வீதத்தால் அதிகரிக்கும்.