(இராஜதுரை ஹஷான்)

20 ஆவது அரசியலமைப்பு  திருத்தம் மக்கள் வாக்கெடுப்புடன் நிச்சயம் நிறைவேறும் எனத் தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக, பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் மாத்திரம் நிறைவேற்றப்பட்டால் போதும் என குறிப்பிடுவது சிலரது சுயநல நோக்கங்களை நிறைவேற்றுவதாக அமையும் என்றார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

மேலும் 70 வருட ஆட்சியில் அனைத்து  தலைவர்களும் மோசடியாளர்களாகவே காணப்படுகின்றனர்.  குறுகிய பதவி காலத்தில் எவ்வளவு  தமக்கும் தமது பரம்பரையினருக்கும்   இருப்புக்களை சேகரிப்பது என்று மாத்திரமே சிந்திக்கின்றனர். 

இதன் ஊடாக ஏற்படும்  எதிர் விளைவுகளை கவனத்தில் கொள்ள மறுக்கின்றனர். கடந்த அரசாங்கத்தை தேசிய அரசாங்கமும் தேசிய அரசாங்கத்தை கடந்த அரசாங்கம்  குற்றஞ்சாட்டுவது மாத்திமே சிறப்பாக இடம்பெறுகின்றது என்றார்.