தனது 3 மாதக் பெண் குழந்தையுடன்  ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் பங்கேற்ற நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டேர்ன் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.நியூசிலாந்தின் வரலாற்றில் இளம் வயதிலேயே பிரதமரான பெண்  என்ற பெருமை 38 வயதான ஜெசிந்தா அர்டேர்னையேச் சாரும்.

ஜெசிந்தா தொலைக்காட்சி தொகுப்பாளரான கிளார்க் கேஃபோர்டை திருமணம் முடித்துள்ளார்.

ஜெசிந்தா கிளார்க் தம்பதியினருக்கு கடந்த ஜுன் மாதம் பெண் குழந்தை பிறந்தது.

பிரதமர் பதவியிலிருக்கும் போது குழந்தை பெற்ற உலகின் இரண்டாவது பிரதமர் என்ற பெருமை ஜெசிந்தா அர்டேர்னையேச் சாரும்.

குழந்தைளை கவனித்துக் கொள்ள 6 வாரங்கள் பேறுகால விடுமுறையிலிருந்த பிரதமர் ஜெசிந்தா தற்போது தனது வழக்கமான பணிகளுக்குத் திரும்பியுள்ளார்.

இந் நிலையில் ஐ.நா சபை கூட்டத்தில் தனது 3 மாத பெண் குழந்தை நீவுடன் கலந்து கொண்ட பிரதமர் ஜெசிந்தா அனைவரது கவனத்தையும் ஈர்த்ததோடு வியப்பிலும் ஆழ்த்தியுள்ளார்.

மனைவி ஜெசிந்தாவிற்கும் மகள் நீவிற்கும் துணையாக கிளார்க் கேஃபோர்ட்டும் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கூட்ட அரங்கில் ஜெசிந்தா குழந்தையை அணைத்துக் கொண்டும், முத்தமிட்டுக் கொண்டும் குழந்தையை கையில் வைத்துக் கொண்டே மாநாட்டில் பேசியுமுள்ளார்.

பிரதமர் ஒருவரின் இத்தகைய செய்கை அனைவரையும் வியப்பிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது.

பிரதமர் குடும்பத்திற்கு வழங்கப்படும் முதல் பிரஜை என்ற அங்கீகராத்திற்கமைய நீவிற்கு நியூசிலாந்தின் முதல் குழந்தைக்கான அடையாள அட்டையுடன் கிளார்க் புகைப்படம் ஒன்றை எடுத்து டுவிட்டரில் பதிவேற்றியுள்ளார்.