கிழக்கில் சீர்குலைக்கப்பட்ட உறவுகளை எவ்வாறு மீளக்கட்டியெழுப்ப முடியுமென செய்து காட்டினோம் - நஸீர் அஹமட்  

Published By: Digital Desk 4

25 Sep, 2018 | 05:11 PM
image

கடந்த கால யுத்தத்தின்போது கிழக்கு மாகாணத்தில் சீர்குலைக்கப்பட்டு சின்னாபின்னமாக்கப்பட்ட இனங்களுக்கிடையிலான உறவை அரசியல் ரீதியாக எவ்வாறு மீளக் கட்டியெழுப்ப முடியும் என்ற வரலாற்றை கிழக்கு மாகாண சபை மூலம் செய்து காட்டினோம் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட்டின் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கும் பொருளாதார மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ஏறாவூர் தளவாய்க் கிராமத்தில் அதி நவீன ஆடைத் தொழிற்சாலைக்கான அடிக்கல் கல் நாட்டும் நிகழ்வு திங்களன்று 24.09.2018 மாலை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட முன்னாள் முதலமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு,  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,  ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, என்பன இணைந்ததொரு உண்மையான நல்லாட்சியை முழு நாட்டமக்களுக்குமே முன்னுதாரணமாக நாங்கள் செயற்படுத்திக் காட்டினோம்.

துன்பத்தை அனுபவித்த அனைத்து சமூக கிழக்கு மாகாண மக்களுக்கும்  எமது கிழக்கு மாகாண சபை ஆட்சியில் எதுவித குழப்பங்களும் வராமல் எந்தவித இன மத வேறுபாடுகளுக்கப்பால்  நிருவாகத்தை  நடாத்தினோம்.

மாகாண அமைச்சர்கள் மட்டத்தில் மூடிய அறைகளுக்குள் இருந்து சமூக நலன் பற்றிச் சிந்தித்து அதனை நடைமுறைப்படுத்தினோம். எமது ஆட்சியில் எவரும் வஞ்சிக்கப்படாதது ஒருபுறமிருக்க மக்கள் நிம்மதியை அனுபவித்தார்கள். அபிவிருத்தியின் பலாபலன்களை அடைந்து கொண்டார்கள்.

பிரிந்த சமூகங்களை இணைத்து, மத்திய அரசிடம் வலியுறுத்தி அபிவிருத்தியைப் பெற்றோம். சமூகங்களுக்கிடையிலான பிரச்சினைகளை அடிமட்டத்திலும் உர் மட்டத்திலும் பேசித் தீர்க்கின்ற புதிய கலாசாரத்தை செய்து காட்டினோம்.

கிழக்கு மாகாணத்தில் தொழிலில்லாத சுமார் 2 இலட்சம் இளைஞர், யுவதிகள் இன்னமும் இருக்கின்றார்கள்.

அதற்காக தொழிற்பேட்டைகளை முன்மொழிந்து, பணத்தைப் பெற்று தொழிற்சாலைகளை நிறுவி வரலாற்றுச் சாதனையை செய்து காட்டினோம். அரசதுறையையும் தனியார் துறையையும் இணைத்து தொழில் முயற்சிகளை முதன்முறையாக தொடங்கி வைத்தோம். வெறுமனே அரசியலுக்காக சமூகங்களைப் பிரிக்கின்ற வஞ்சகத்தை இல்லாமலாக்கினோம்.

30 வருட யுத்தத்தால் ஏற்பட்ட சமூகங்களுக்கிடையிலான பிரிவினையை சுமார் இரண்டரை வருடத்தில் இணைத்தோம். யுத்தத்தக் காரணம் காட்டிக் கொண்டோ அல்லது அரசியலைக் காரணம் காட்டிக்கொண்டோ நாங்கள் நாங்கள் ஒருபோதும் இன ரீதியாகப் பிரிந்திருக்க முடியாது.

தெரிழில் மூலம் ஒன்றிணைந்து வாழலாம் என்பதை எமது தொழிற்சாலைகளில் தமிழ் முஸ்லிம் சிங்களம் உட்பட அனைத்து சமூகங்களுக்கும் வாய்ப்புக் கொடுத்ததன் மூலம் இதனை மெய்ப்பித்துக் காட்டினோம்.

நாம் திருகோணமலை சம்பூர் பகுதியிலும் அம்பாறை நாவிதன்வெளிப் பகுதியிலும் மூவின மக்களையும் இணைத்து வேலைவாய்ப்பளிப்பதற்காக ஆரம்பித்து; முடிவுறுத்தப்பட்ட தொழிற்சாலை எமது மாகாண சபை நிருவாகம் முடிந்ததன் பி;ன்னர் இன்றுவரை திறக்கப்படாமலிருப்பது கவலையளிப்பதாக உள்ளது.

அத்தொழிற்சாலைகளை தொழில் வாய்ப்புக்காக திறந்து இளைஞர் யுவதிகளிடம் ஒப்படைக்கின்ற திராணியற்றதாக மாகாண நிருவாகம் இருந்து கொண்டிருக்கின்றது.

கடந்த கால யுத்தத்தில் அனைத்தையும் இழந்து குடும்பங்களைப் பிரிந்து வேதனையை அனுபவித்த கிழக்கு மாகாண பெண்கள் பணிப்பெண்களாக வெளிநாடு செல்வதை நிறுத்திக் காட்டினோம்.

இதேபோல இன்னும் நிறையச் செய்ய வேண்டியிருக்கிறது. இதனை அரசியல்வாதிகள் உணர்ந்து செயற்பட வேண்டும்.” என்றார்.

ஏறாவூரில் நவீன தரத்திலான ஆடைகளை சர்வதேச சந்தைக்குத் தயார்படுத்தும் இந்த ஆடைத் தொழிற்சாலை எதிர்வரும் 2019ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் உற்பத்தியை ஆரம்பிக்கக் கூடிய வகையில் நிர்மாண வேலைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

முன்னாள் முதலமைச்சரின் சொந்த முயற்சியில் ஏறாவூரில் தொடங்கும் நான்காவது நவீன சர்வதேச தரத்தினாலான ஆடைகளை உற்பத்தி செய்யும் இத்தொழிற்சாலையில் சுமார் 400 பேர் நேரடியாகவும் கிட்டத்தட்ட அதே எண்ணிக்கையுடைய ஏனைய தொழிலாளர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டுப் பணிப்பெண்களாக வேலைவாய்ப்புப் பெற்று மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் பெண்களுக்கு உள்ளுரிலேயே வேலை வாய்ப்பு வழங்குவதற்காக ஏற்கெனவே ஏறாவூரில் ஆரம்பிக்கப்பட்ட மூன்று ஆடைத் தொழிற்சாலைகளும் தற்போது வெற்றியளித்து வருவதாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19